அண்ணன் இசையில் பாடிய அனுபவம்! ஏ.ஆர். ரஹ்மான் தங்கை பெருமிதம்

  • IndiaGlitz, [Saturday,July 01 2017]

ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகியுள்ள 'மாம்' படம் தமிழிலும் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரும் ஆஸ்கார் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை தனது தங்கை இஷ்ரத்காதிரி அவர்களை பாட வைத்துள்ளார். அண்ணன் ரஹ்மான் இசையில் பாடிய அனுபவம் குறித்து இஷ்ரத்காதிரி கூறியதாவது:

எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்துவிட்டது. ஒருநாள் அண்ணன் ரஹ்மானின் உதவியாளர் எனக்கு போன் செய்து 'மாம்' படத்தின் தமிழ்ப்பதிப்பில் ஒரு பாடலை பாட எனக்கு அழைப்பு விடுத்தார். அடுத்த நாளே ரிக்கார்டிங் என்பதால் அன்றிரவே எனக்கு விவேக் எழுதிய அந்த பாடல் வழங்கப்பட்டது.

அந்த பாடல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் இருந்ததால் அன்று முழுவதும் நான் அந்த பாடலின் வரிகளை ஹைபிட்சில் பாடி பயிற்சி செய்தேன். அடுத்தநாள் ரிகார்டிங் செல்லும்போது அந்த பாடலை நான் ஹைபிட்ச் மற்றும் லோபிட்ச் என இரண்டிலும் பாட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். ரிகார்டிங் முடிந்ததும் அண்ணாவின் எஞ்சினியர் என்னிடம் பாடல் நன்றாக வந்துள்ளதாக ரஹ்மான் பாராடியதாக கூறியதும் எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது என்று கூறினார்.

More News

கத்தியை காட்டி மிரட்டியவருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த காவல்துறை அதிகாரி

கதிராமங்கலம் கிராமத்தில் அமைதியாக போராடிய கிராமத்து மக்களை அடித்து விரட்டிய காவல்துறையினர் ஒருபக்கம் இருக்கும் நிலையில் தன்னை கத்தியால் குத்த வந்த ஒருவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தி அவருக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் உணவும் வாங்கிக்கொடுத்த ஹாங்காங் காவல்துறை அதிகாரி ஒருவரின் நெகிழ வைக்கும் உதவி குறித்த செய

கடனை எப்படி அடைக்கிறது? 'இவன் தந்திரன்' இயக்குனர் கண்ணீர் பேட்டி

நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரியுடன் தமிழக அரசின் நகராட்சி வரியான 30% கேளிக்கை வரியையும் திரையரங்குகள் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் திரையரங்க கட்டணத்தில் இருந்து 58% வரி மட்டுமே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது...

கதிராமங்கலம் தீ சென்னைக்கும் பரவுகிறதா? மெரீனாவில் திடீர் போலீஸ் குவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் நேற்று ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தின் குழாய்களில் கசிவு ஏற்பட்டு அங்குள்ள வயல்களில் தீப்பற்றி எரிவதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்...

திங்கள் முதல் தியேட்டர்கள் மூடல்: நேற்று வெளியான படங்களின் கதி?

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் திங்கள் முதல் தியேட்டர்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

திங்கள் முதல் தியேட்டர்கள் மூடல்: நேற்று வெளியான படங்களின் கதி?

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் திங்கள் முதல் தியேட்டர்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...